சிலை கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்.! - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


பதவி நீட்டிப்பு குறித்து பொன் மாணிக்கவேல் பதிலளிக்கவும், சிலை கடத்தல் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியான பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியோடு நிறைவடைந்தது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி பொன். மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளார்.


இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கக்கோரி தமிழக அரசு பொன் மாணிக்கவேலுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அதற்கு அவர் '' தமிழக சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக தன்னை ஐகோர்ட் நியமித்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதனால் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஆவணங்களையும் என்னால் தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என பதில் கடிதம் அனுப்பினார்.