தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்துவரும் நிலையில் அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேசமயம் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், சென்னை, கடலூர் ஆகிய பகுதிகளில் மழை காரணமாக நிகழ்ந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்ட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காலை 5 மணிக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. 15 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.