Sensex: புதிய உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை

பங்கு வர்த்தகத்தின் வாரத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 25) மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை நேரத்தில் 40,439.66 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக 40,931.71 புள்ளிகளுக்குச் சென்ற சென்செக்ஸ் பங்குச் சந்தை வரலாற்றில் தனது மிகப் பெரிய ஏற்றத்தைப் பதிவுசெய்தது. பின்னர் 40,393.90 புள்ளிகளுக்குக் குறைந்து இறுதியில் 40,889.23 புள்ளிகளில் நிலைபெற்றது. இது நேற்றைய தினத்தை விட 1.31 சதவீதம் அல்லது 529.82 புள்ளிகள் அதிகமாகும்.